டெல்லி: பாஜக ஆட்சியில் இந்தியா கடன் வலையில் சிக்கி உள்ளதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் மொத்த கடன் ரூ.215 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. இந்திய ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 56 சதவீதமாக கடன் அதிகரித்துவிட்டது.நாட்டின் கடன்களை குறைக்க ஒன்றிய பாஜக அரசிடம் முறையாக திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.
