48 சென்ட் நிலத்தை ஏமாற்றி வாங்கியதாக பாஜவில் இணைந்த அதிமுக நிர்வாகி மீது ஐஜியிடம் புகார்

திருச்சி, பிப். 3:  திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வீரங்கிநல்லூரை சேர்ந்த சண்முகராஜ் (38) என்பவர் திருச்சி மத்திய மண்டல ஐஜி ெஜயராமிடம் நேற்று மாலை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது வீட்டருகே எனக்கு சொந்தமாக 48 சென்ட் நஞ்சை நிலம் உள்ளது. தற்போது இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும். இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு எனது ஊரை சேர்ந்த சுரேஷ், சரவணன் ஆகியோர் ரூ.65 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக கூறி முன் ெதாகை கொடுத்தனர். இதில் நிலம் குறித்து பல்வேறு ஆவணங்கள் திரட்ட காலதாமதம் ஆனது. கொடுத்த முன்தொகையை இருவரும் திருப்பி கேட்டனர். தொகை செலவழித்து விட்டதால் வட்டியுடன் திருப்பி கொடுக்க இருவரும் நிர்பந்தம் செய்தனர்.

இதையடுத்து எனது ஊரை சேர்ந்த நிலப்புரோக்கர்கள் கண்ணன், விக்னேஷ் இருவரின் ஏற்பாட்டில் கரூரில் உள்ள வி.வி.செந்தில்நாதன் என்பவரிடம் 1 ரூபாய் வட்டிக்கு வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றனர்.

அங்கு அவர் ரூ.65 லட்சம் கடன் தரமுடியாது. இடத்தை கிரயம் செய்து கொடுங்கள் என கூறியதை அடுத்து அவரின் பினாமியான கிருஷ்ணகுமார் என்பவர் பெயரில் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 பிப்ரவரி 6ம் தேதி கிரயம் செய்து கொடுத்தேன். அப்போது ரூ.2.30 லட்சத்திற்கு காசோலை கொடுத்து மீதமுள்ள தொகையை வீட்டில் வந்து வாங்கி கொள்ளும்படி வி.வி.ெசந்தில்நாதன் கூறி சென்றார். இதையடுத்து மறுநா  அவரது வீட்டிற்கு சென்று கேட்ட போது, அந்த இடத்திற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. புரோக்கர்கள் விக்னேஷ், கண்ணன் ஆகியோர் எனக்கு பணம் தரவேண்டும். அந்த பணத்திற்கு இடம் சரியாகிவிட்டது என கூறி மிரட்டியதோடு, இங்கிருந்து செல்லாவிட்டால் கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார்.

இந்நிலையில் 2018 பிப்ரவரி 9ம் தேதி ரூ.10 லட்சத்திற்கு காசோலை கொடுத்த விக்னேஷ், நான் கூறும் போது வங்கியில் செலுத்தி பணம் எடுத்து கொள் என கூறினார். ஆனால் இதுவரை வங்கியில் செலுத்த கூறாமல் ஏமாற்றி வருகிறார். என்னை ஏமாற்றி எனது இடத்தை அபகரித்த அரசியல் பிரமுகரான வி.வி.செந்தில்நாதன், அவரது பினாமிகள் கிருஷ்ணகுமார், ஜீவா, நிலபுரோக்கர்கள் விக்னேஷ், கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதற்கிடையில் வேறு ஒரு வேலையாக ஐஜி அலுவலகம் வந்திருந்த வி.வி.செந்தில்நாதனிடம் உங்கள் மீது புகார் அளித்துள்ளதாக சண்முகராஜ் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே ஐஜி அலுவலகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வெளியே வந்த சண்முகராஜ் மற்றும் அவரது வக்கீல் வினோத்குமார் ஆகியோரிடம் வி.வி.செந்தில்நாதன் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதுகுறித்து வக்கீல் வினோத்குமார் கூறுகையில்,புகார் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கூறிய போது, அங்கு வந்த வி.வி.செந்தில்நாதன் அவருடன் இருந்தவர்கள் பணம் கொடுக்க முடியாது. முடிந்தால் வாங்கி கொள்ளுங்கள் என கூறி மிரட்டினர். பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அவர், போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு என்ன கூறினார் என தெரியவில்லை. ஐஜி அலுவலகம் வந்த கே.கே.நகர் போலீசார் எங்கள் தரப்பினரை வேனில் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்றார். வி.வி.செந்தில்நாதன், அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் மாநில செயலாளராக 3 மாதம் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பில் இருந்துள்ளார். அப்போது இரண்டு முறை அரவக்குறிச்சி தொகுதியில் 2011 மற்றும் 2019 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

Related Stories: