கர்நாடகாவில் 42 ஆயிரம் சட்டவிரோத வங்கிக்கணக்குகள் கண்டுபிடிப்பு

 

பெங்களூரு: கர்நாடக சைபர் குற்றப்பிரிவு சிஐடி 2 நாட்கள் நடத்திய தீவிர சோதனையில் 42,000க்கும் அதிகமான, சட்டவிரோதமாக பணத்தை கையாளும் வங்கிக்கணக்குகளை அடையாளம் கண்டதுடன், இதுதொடர்பாக 20 வழக்குகள் பதியப்பட்டு, இந்த மோசடியின் மூளையாக செயல்பட்ட 12 பேரைக் கைது செய்தனர். கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையில், 29 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிநபர்களிடமிருந்து அடையாள அட்டைகள், ஆவணங்கள், ஏடிஎம் கார்டுகள், காசோலை புத்தகங்களை சேகரித்து ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை கமிஷன் வழங்கி அவர்களது வங்கிக்கணக்குகளைப் பெற்று, ஆன்லைன் மோசடிகள், சட்டவிரோத பந்தயங்கள், டிஜிட்டல் கைது மோசடியுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: