தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார்.ஆனால் எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜகவின் மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம்; மு.க.ஸ்டாலினின் திமுக பயப்படாது,”என்றார்.

Related Stories: