விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அதில், “தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணியோடு அதிமுக கைகோர்த்துள்ளது. உத்திரப்பிரதேசம், மராட்டியம், குஜராத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பாஜக, தமிழ்நாட்டுக்கு கிள்ளிகூட கொடுப்பதில்லை. துரோகத்தோடுதான் கைகோர்த்து ஒரு கூட்டணி நமக்கு எதிராக இருக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறும் அதிமுக – பாஜக துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது: கனிமொழி எம்.பி.
- ஆதிமுகா - பிஜபி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கில்லிக்
- கனிமொழி எம். பி.
- விருதுநகர்
- தென் மண்டலம்
- சங்கம்
- அணி
- விருதுநகர் மாவட்டம்
- திமுகா எம். பி.
- கன்னடம்
