ராஜகம்பீர ராஜகோபாலசுவாமிக்கு குடமுழுக்கு!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவில் உள்ள கோமல் என்னும் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில், மன்னன் வீரசோழன், தனது மனைவியுடன் ராஜகோபாலசுவாமியை வழிபாடு செய்திருக்கிறார். இக்கோயில், கிழக்கு நோக்கி அழகாக காட்சிதருகிறது. முகமண்டபம், அந்தராளம், கருவறை ஆகியவற்றை கொண்டுள்ளது. கோயிலின் பெயர் ராஜகோபால ஸ்வாமி என்று இருந்தாலும், மூலவரின் திருநாமம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆகும். அதோடு உற்சவரான ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார். பலிபீடமும், கருடாழ்வாரும் கருவறை நோக்கி இருப்பதைக் காணலாம். மேலும், அழகான இரண்டு லட்சுமி நாராயணப் பெருமாளின் திருமேனிகளும் உள்ளது. தவிர, குழலூதும் கோவலனாக ஸ்ரீ வேணுகோபாலன், ஸ்ரீ மதனகோபாலன், குழந்தைக் கண்ணன், ஆஞ்சநேயர் என தனித்தனி சந்நதிகளைக் கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.

இக்கோயிலில், வரும் 8.2.2026 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களாக, புண்யாஹவாசனம், விஷ்வக்ஸேன ஆராதனை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, 81 கலச திருமஞ்சனம் ஹோமங்கள் என நடைபெற்றது.

தற்போது, 8.2.2026 (நாளை) அன்று காலை 5.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கோபூஜை, மூன்றாம் கால சதுஸ்தான திருவாராதனங்கள், சாந்தி ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற உள்ளது.

மேலும், காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு திருவீதியுலாவும் நடைபெற உள்ளது.

பக்தர்கள் அனைவரும் தவறாது குடமுழுக்கு விழாவில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கோயில் தொடர்புக்கு: 9791145973.

எப்படிச் செல்வது: மயிலாடுதுறையில் இருந்து எண் 10, 10B, 10C, 19 ஆகிய வழித்தடம் பேருந்துகளும், கும்பகோணத்தில் இருந்து எண் 53, 33 ஆகிய பேருந்துகள் இக்கோயிலுக்குச் செல்கின்றன.

Related Stories: