×

திருப்பதி புறநகர் வளர்ச்சி ஆணையம் கட்டப்பட்டு வரும் துடா டவர்ஸ் கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் தலைவர் ஆய்வு

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க உத்தரவு

திருமலை : திருப்பதி நகரில் கட்டப்பட்டு வரும் துடா டவர்ஸ் கட்டுமான பணிகளை துடா தலைவர் ஆய்வு செய்தார். அப்போது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திருப்பதி புறநகர் வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் (துடா) டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிகவளாகம் அன்னமய்யா சந்திப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனை துடா தலைவர் டாலர்ஸ் திவாகர் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ஆர்.கோவிந்த ராவ் ஆகியோர் இணைந்து கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டப்படும் குடியிருப்புகள், வணிக வளாகத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் இதுகுறித்து துடா தலைவர் டாலர்ஸ் திவாகர் ரெட்டி கூறியதாவது: திருப்பதி நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதன்படி, துடா டவர்ஸ் திட்டத்தை ஒரு அடையாள சின்னமான கட்டிடமாக மாற்றுகிறோம். முதலமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்ப திருப்பதி நகரத்தை அழகுபடுத்தும் செயல்பாட்டில் துடா டவர்ஸ் ஒரு மைல்கல்லாக நிற்கும்.இந்த திட்டத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் மிக உயர்ந்த தரத்துடன் முடிப்பதே எங்கள் முன்னுரிமை.

கட்டிடத்தின் கட்டுமானத்தில் எந்த சமரசமும் செய்யாமல் சர்வதேச தரங்களைப் பின்பற்ற பொறியியல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதற்கான பணிகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் வரவிருக்கும் பார்க்கிங் வசதிகள்

மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. கட்டுமானப் பகுதியில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும் மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகள் சீராக செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் துடா செயலாளர் என்.வி.ஸ்ரீகாந்த் பாபு, எஸ்.இ.ரவீந்திரய்யா, நில அலுவலர் சுஜனா, துடா அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Tags : Tirupati Suburban Development Authority ,Dhuda Towers ,Tirumala ,Dhuda ,Tirupati ,Tirupati Suburban Development Authority… ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது