மணிப்பூரில் புதிய முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது. குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், அச்சமூகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அரசில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் பகுதியில் போராட்டம் வெடித்தது.
