×

மணிப்பூரில் புதிய முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது!!

இம்பால்: மணிப்பூரில் புதிய முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது. குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், அச்சமூகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அரசில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் பகுதியில் போராட்டம் வெடித்தது. மணிப்பூரில் துணை முதலமைச்சர் நெம்சா கிப்ஜென் பதவி விலக வலியுறுத்தி மாநில முழுவதும் குகி அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நீக்கப்பட்டு புதிய முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் பதவி ஏற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சியின் போது குகி மற்றும் மெய்டி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த இந்த கலவரத்தை அடுத்து அப்போதைய முதலமைச்சர் பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு, பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி வரும் 12ல் முடிவடைகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் இன்று மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது.
புதிய முதலமைச்சர் பதவியேற்ற மறுநாளே மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவலரக்காரர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைத்தனர். அமைதியை நிலைநாட்ட காவல்துறை, துணை ராணுவ படைகள் முயன்று வருகின்றன.

Tags : Chief Minister ,Yumnam Kemchand Singh ,Manipur ,Nemsa Kibjen ,Kugi ,Surachandpur ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது