800 கற்றல் மையங்களை உருவாக்கிய இந்திய ஆசிரியைக்கு ரூ.8.5 கோடி பரிசு

துபாய்: மும்பையை சேர்ந்த ஆசிரியை ரூபிள் நாகி. இவரது ரூபிள் நாகி கலை அறக்கட்டளை இந்தியா முழுவதும் 800 க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை நிறுவியுள்ளது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கட்டமைக்கப்பட்ட கற்றலைத் தொடங்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கும் கற்பிக்கிறார்கள். ரூபிள் நாகியின் பூர்வீகம் ஜம்மு காஷ்மீர். அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசாங்க உச்சி மாநாட்டில் அவருக்கு சர்வதேச சிறந்த ஆசிரியைக்கான விருது வழங்கப்பட்டது. இதில் அவருக்கு ரூ.8.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.

Related Stories: