அனில் அம்பானி ஊழலை விசாரிக்க சிறப்பு புலன் விசாரணை குழு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வங்கி முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரைணக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் இருக்கும் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக அமலாக்கத்துறை நிர்வாகம் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலன் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இந்த விவகாரத்தில் சுமார் ரூ.1 லட்சத்து 78ஆயிரம் கோடி தொகை என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த விவகாரத்தில் கூட்டு சதி நடந்துள்ளதா என்றும் சிபிஐ தரப்பில் காண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டக் கூடாது. மேலும் இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் அடுத்த நான்கு வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

Related Stories: