×

பேரறிஞர் அண்ணா நினைவுதினம் அமைச்சர்கள் மரியாதை

விருதுநகர், பிப். 4: விருதுநகரில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் விருதுநகர் எம்எல்ஏ, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன், விருதுநகர் திமுக நகர செயலாளர் தனபாலன், விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, விருதுநகர் நகராட்சி கவுன்சிலர் மதியழகன் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Perarigna Anna Memorial Day ,Virudhunagar ,Sathur Ramachandran ,Thangam Thennarasu ,Anna ,Tamil Nadu ,Chief Minister ,Perarigna Anna ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை