×

தமுமுக, மமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி, பிப். 4: தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும்,தலைமை பிரதிநிதியுமான ஆசாத் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான், தலைமை பிரதிநிதி ஜோசப் நெலஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகர, மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்ட தமுமுக தலைவராக கயத்தாறு அஸ்மத், மாவட்ட செயலாளராக பரகத்துல்லா, பொருளாளராக ஐதுருஸ், தூத்துக்குடி மாநகர தலைவராக சேக் மொய்தீன் அலி, செயலாளராக செய்யது அலி, பொருளாளராக யூனுஸ், மமக மாவட்ட செயலாளராக யூசுப், செயலாளராக சேக் ஜான் ராஜா தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : TMU ,MMA ,District General Committee Meeting ,Thoothukudi ,Thoothukudi District ,City TMU ,Humanity People's Party ,General Committee ,Azad ,
× RELATED பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த...