×

தேவர்குளம் அருகே வாலிபரை வெட்டிக்கொல்ல முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை

நெல்லை, பிப். 4: நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகேயுள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் (29) இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ரமேஷ் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார், ரமேஷிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அருண்குமார், ரமேஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்தார்.

இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். இந்த வழக்கு நெல்லை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நெல்லை முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் நேற்று விசாரணை நடத்தி, அருண்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு துரிதமாக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்த தாழையூத்து டிஎஸ்பி ரகுபதிராஜா, தேவர்குளம் இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி, ்அப்போதைய இன்ஸ்பெக்டர் சபாபதி, அரசு வக்கீல் பால் மாயாண்டி, ஏட்டு மீனா ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் பாராட்டினார்.

Tags : Thevarkulam ,Nellai ,Nellai court ,Nellai district ,Ramesh ,Madathupatti ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை