- Puliyangudi
- வீராசாமி செட்டியார் கல்வி நிறுவனங்கள்
- நகராட்சி
- விஜய சௌந்திரபாண்டியன்
- நகராட்சி துணைத் தலைவர்
- Antonisamy
- கல்லூரி
- முதல்வர்கள்
- மணிகண்டன்
புளியங்குடி,பிப். 4: புளியங்குடியில் வீராசாமி செட்டியார் கல்வி நிலையங்களின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் நடந்தது. புளியங்குடி பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணிக்கு நகராட்சி துணைத்தலைவர் அந்தோனிசாமி, கல்லூரி முதல்வர்கள் மணிகண்டன், இசக்கிமுத்து முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் கார்த்திக் ராஜா வரவேற்றார். சிறப்பு எஸ்ஐ மணிகண்டன் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான பயணம் குறித்து விளக்கிக் கூறினார். காந்தி பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி டிஎன் புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்ற மாணவர்கள், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் தங்கப்பன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
