×

நாசரேத் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத், பிப். 4: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்தார். ஆங்கில துறை மாணவி ஷர்மிளா ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவி பிரிடா வேதப்பாடம் வாசித்தார். மாணவி காவியா ஜெப பாடல் பாடினார். பேராசிரியை பியூலா ஹேமலதா வரவேற்றார். நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் கலந்து கொண்டு மாணவ- மாணவியருக்கு சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என அறிவுரை வழங்கினார். இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். பேராசிரியை ஷைனி ஷேரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் காபிரியேல் தேவ இரக்கம் ஜெபராஜன் தலைமையில் முதல்வர் ஜீவி எஸ்தர், ஒருங்கிணைப்பாளர் சீயோன் செல்லரூத், பேராசிரியை ஜெய அனி ஜோஸ்பின் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Awareness ,Nazareth College ,Nazareth ,Nazareth Markazis College ,Road Safety Week ,Principal ,G.V. Esther Rathinakumari ,English Department ,Sharmila ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை