×

தூத்துக்குடி கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்

தூத்துக்குடி, பிப். 4: தூத்துக்குடி கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் இணைப்புச்சாலைகள் மற்றும் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி 16, 17வது வார்டுகளுக்குட்பட்ட கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர், முத்துகிருஷ்ணா நகர், கோக்கூர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Tuthukudi Kathirvel Nagar ,Mother Teresa City ,Thoothukudi ,Mayor ,Jehan Peryasami ,Kathirvel Nagar ,Mother Teresa Nagar ,Tuthukudi ,
× RELATED ராஜபாளையத்தில் நாளை மின்தடை