மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு பதில் கிரிக்கெட் அமைப்புகளை மாஜி வீரர்கள் வழிநடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தேர்தலில் சரத்பவார் பேரன் ரோகித்பவார் மற்றும் பா.ஜ நிர்வாகியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கேதர் ஜாதவும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஜி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது,’ சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெற்று இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் யாரைக் கொண்டு வருகிறீர்கள்? ஆட்டத்தைப் பற்றித் தெரியாதவர்களை… மட்டை பிடிக்கக்கூடத் தெரியாதவர்களை. விளையாட்டு சங்கங்கள் நிர்வாகிகளால் அல்ல, விளையாட்டு வீரர்களாலேயே இயங்குகின்றன. இதை கருத்தில் கொண்டு மும்பை உயர் நீதிமன்றம் விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: