டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பிற நாட்டு தலைவர்களிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
