புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும் ரம்மியமாக இருக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (3ம் ேததி) முதல் மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் மாளிகையை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் நாளை முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4ம் தேதியும் தோட்டம் மூடப்படும். தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
