×

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் வழக்கு தொடுத்துள்ளார். தனது முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி ராமதாஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது, எதிர் தரப்பினராக இல்லாதபோது வாதிட அனுமதிக்க முடியாது என அன்புமணி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

Tags : High Court ,Election Commission ,Ramdas ,Anbumani ,Chennai ,Chennai High Court ,Ramadas ,
× RELATED கரூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 50 பயணிகள் காயம்!!