×

நீட் முதுநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.ஐ. கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலம்!!

சென்னை: நீட் முதுநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.ஐ. கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலம். 3-வது கட்ட கவுன்சிலிங்கில் முதுநிலை மருத்துவ படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பிரிவுக்கு மாறினர். என்ஆர்ஐ கோட்டாவுக்கு மறியதன் மூலம் நீட் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும். மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தியர் என்பதை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குடியுரிமை தகுதியை மாற்றி மோசடி செய்துள்ளனர்.

Tags : NRI ,Ambalam ,Chennai ,Indians ,
× RELATED கரூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 50 பயணிகள் காயம்!!