சென்னை: தமிழ்நாட்டு வளர்ச்சியை படுகுழியில் தள்ள நினைக்கும் பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிள்ளார். எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. பிப். 3-ல் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி பேரணியில் பங்கேற்கிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
