டெல்லி: தங்கம் விலை உயர்வால், இந்தியாவின் தங்க தேவை 2025ம் ஆண்டில் 11% சரிந்த நிலையில், நடப்பாண்டு மேலும் சரியும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. கடந்தாண்டு 710.9 டன்னாக இருந்த தங்க தேவை, 2026ல் 600 முதல் 700 டன் வரையிலேயே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
