அரியலூர், ஜன. 28: அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ஐடிபிஐ வங்கி சார்பில் தளவாடப் பொரு ள்கள் நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வங்கியின் மேலாளர் சுரேஷ்குமார், பள்ளிக்கு தேவையான மேஜை, நவீன தொலைக்காட்சி பெட்டி, கணினி, பீரோ என உள்ளிட்ட தளவாடப் பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால் தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முன்னதாக தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வேலுசாமி நன்றி கூறினார்.
