மதுரை, ஜன .29: கடந்த 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி சென்னையில் நேற்று 34வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதன்படி, மதுரையில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது.
