கம்பம் மகப்பேறு மருத்துவருக்கு விருது

கம்பம் ஜன. 29: கம்பம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பொது மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பர்வீனுக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் அதிகளவு பிரசவம் நடைபெறுகிறது.

மாதந்தோறும் சுமார் 250 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உள்ள சீமாங் சென்டரில் பிறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் கம்பம் பர்வீனுக்கு சிறந்த மருத்துவர் விருதை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

 

Related Stories: