வாலிபர் மர்மச்சாவு?

போடி, ஜன.29: போடி கம்பர் தெருவை சேர்ந்த செல்வராஜூக்கு திருமணமாகவில்லை. இவர் தேனியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போடி பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு வங்கி அருகே மயங்கிய நிலையில் தரையில் செல்வராஜ் விழுந்து கிடந்தார்.

இதனை பார்த்த அவரது உறவினர் விஜயகுமார், அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில செல்வராஜ் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ குருகவுதம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Related Stories: