உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் குடியரசு தின விழா

ஜெயங்கொண்டம், ஜன. 28: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமையேற்று கொடியேற்றினார். முன்னதாக உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் வரவேற்றார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், கிராம கல்வி குழு தலைவர் மலர்விழி இரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார்.

குடியரசும் மக்கள் சுதந்திரமும் என்ற தலைப்பில் காந்தி, நேரு, அம்பேத்கர், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்தார். குடியரசு தின விழாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வில் கவுன்சிலர் பிரபாகர், கீதாகொளஞ்சிநாதன், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் பிரபாகரன், ஜெகநாதன், வைத்தீஸ்ஸரி, அனுப்பிரியா செல்வராஜ், வனிதா, சாந்தி, வளர்மதி, ராஜசேகரன் அருட்செல்வி, கவிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை தமிழாசிரியர் ராமலிங்கம் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.

 

Related Stories: