மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம்: கலெக்டர் சினேகா பங்கேற்பு

மதுராந்தகம், ஜன.28: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று தானியக்கிடங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன், கவுன்சிலர் பொன்மலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஊராட்சி செயலர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் கலெக்டர் சினேகா கலந்துகொண்டு பொதுமக்களிடையே குறைகளை கேட்டபோது, ஊராட்சி சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் 2004ம் ஆண்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டா, வருவாய்த் துறையின் பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பட்டாக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் பட்டா வழங்கப்படும் என்று கலெக்டர் பதிலளித்தார்.

மேலும் கீழ்ப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரியை தூர்வாரவும், நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் 20 இருளர் குடும்பங்களுக்கு விரைவில் பட்டா வழங்கவும், மின்னல், கீழ் மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்தார். தொடர்ந்து மின்னல் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, இணை இயக்குநர் பிரேம் சாந்தி, உதவி இயக்குநர் விக்னேஷ், துணை இயக்குநர் பானுமதி, தாசில்தார் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: