மதுரை: கரூர் கல்யாண வெங்கட்ரமண கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத ஆணை. கரூர் வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும், யாக குண்டத்து வெளிய உட்கார வைக்க கூடாது என்று கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு அளித்துள்ளது.
