சென்னை: சென்னை அடையாறில் சாலையோரமாக சாக்கு மூட்டையில் பீகார் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
