×

44 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை: அதிகாரி விஸ்வநாதன் தகவல்

சென்னை: சென்னை துறைமுகம் சார்பில், தண்டையார்பேட்டையில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் நினைவு விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. துறைமுக தலைவர் எஸ்.விஸ்வநாதன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பேசியதாவது;
மிகப்பெரிய தியாகத்தின் மூலம் பெறப்பட்டுள்ள சுதந்திரத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் நாம் அனைவரும் செயலாற்ற வேண்டும். நடப்பு நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 44 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது. சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுவதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1.58 லட்சம் கார்கள் கையாளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் வருவாய் ரூ.124 கோடி அதிகரித்த நிலையில் லாபமாக ரூ.27 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தின் வடக்கே ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதியமுனையம் அமைக்கப்பட உள்ளது. பல்லடுக்கு கார் நிறுத்த முடியும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.5 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்று வரும் சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையேயான ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் அடுத்தாண்டு நிறைவடையும். துறைமுகத்தின் செயல்பாடுகள் ரூ.45 கோடி செலவில் டிஜிட்டல் முறைக்கு மாற்றி அமைத்துள்ளோம்.இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், துறைமுக கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், துறை தலைவர்கள் எஸ்.கிருபானந்த சாமி தாரா சுகிர்தா, டாக்டர் அனு சுஜாதா, சதீஷ்குமார், மல்லா சீனிவாச ராவ், ரவிக்குமார், மில்டன் கலந்துகொண்டனர்.

Tags : Chennai ,Officer ,Viswanathan ,Republic Day ,Babu Jegajevan Ram Memorial Sports Stadium ,Dandiyarpetta ,Port ,President ,S. Viswanathan ,Union Labour Security Forces ,
× RELATED சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத...