தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க, மகளையே தாய் தூண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானது: ஐகோர்ட் கருத்து!!

சென்னை : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2023ம் ஆண்டில் தந்தைக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புதுச்சேரியில் தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்தான மனைவி பழிவாங்கும் வகையில் புகார் அளித்துள்ளதாக தந்தை மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க, மகளையே தாய் தூண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. பொய் சாட்சியம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அளித்த தீர்ப்பு நிலைக்கத்தக்கதல்ல. சம்பவம் நடந்த உடனேயே புகார் தராமல் நோட்டீஸ் அளிக்கப்பட்ட பின் தாயார் புகாரளித்ததால் தந்தைக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்கிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: