சென்னை: இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தி படித்திருந்தால் நாமும் மோடியின் வித்தைக்கு மயங்கி இருப்போம். இந்தியை தாய் மொழியாகக் கொண்ட பலர் தமிழ்நாட்டில் வேலைக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மோடி வித்தை எடுபடாமல் போனதற்கு நாம் இந்தி படிக்காததுதான் காரணம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
