×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைக்கிருத்திகை விழா: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

திருப்போரூர்: திருப்ேபாரூர் கந்தசுவாமி கோயிலில் நடந்த தைக்கிருத்திகை விழாவில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்தார். இன்று இரவு வெள்ளி மயில் வாகன வீதியுலா நடக்கிறது. திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் முருகன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் இன்று தைக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து களில் வந்து குவிந்தனர். இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதயாத்திரையாக காவடி எடுத்தபடி திருப்போரூர் கோயிலுக்கு வந்தனர்.

முருகன் கோயிலை ஒட்டியுள்ள சரவணப்பொய்கையில் நீராடி மொட்டை அடித்து வேல் தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து நான்கு மாடவீதிகளிலும் உலா வந்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் நான்கு மாடவீதி களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு திருப்போரூர் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அங்குள்ள சத்திரம் ஒன்றில் தங்கி காலையில் சரவணப்பொய்கை குளத்தில் நீராடினார். இதைத்தொடர்ந்து இன்று காலை அவர், நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தைக்கிருத்திகையையொட்டி திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களுக்கு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின்களை பாது காக்கும் வகையில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு வளையம் தரப்பட்டது. இன்று இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை யுடன் முருகப்பெருமான் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் குமார துரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Thiruporur Kandaswamy Temple ,Minister ,Sekharbhabu ,Thiruporur ,P. K. Sekarpapu ,Kandaswamy Temple ,Tiruporur ,Murugan ,
× RELATED நூறுநாள் வேலை திட்டத்தை பழைய வடிவிலேயே அமல்படுத்த வேண்டும்