×

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் டெர்மினல் 2 புறப்பாடு பகுதியில் திடீர் தீ விபத்து!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் டெர்மினல் 2 புறப்பாடு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 2வது தளத்தில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலக பகுதியில் மின்கசிவு காரணமாக, திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணிக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : international terminal Terminal 2 ,Chennai Airport ,Chennai ,Singapore Airlines ,
× RELATED நூறுநாள் வேலை திட்டத்தை பழைய வடிவிலேயே அமல்படுத்த வேண்டும்