தூத்துக்குடியில் பரிதாபம்; கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12), முறையே 8, 9, 7ம் வகுப்பு பயின்று வந்தனர். நண்பர்களான மூவரும் மேலும் 6 பேருடன் நேற்று மாலை கடலில் குளிப்பதற்காக தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைக்கு சென்றனர். கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

சிறுவர்கள் 5 பேர் நீந்தியும், தத்தளித்தும் கரைக்கு வந்தனர். மீனவர் ஒருவர் சிறிய படகில் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். மற்ற 3 பேரும் கடலில் மூழ்கினர். தகவலறிந்து தாளமுத்துநகர் மற்றும் மரைன் போலீசார் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று தீவிரமாக தேடுதலில் ஈடுபட்டு நரேன்ஸ்ரீ கார்த்திக், திருமணி, முகேந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களையும் அடுத்தடுத்து மீட்டனர். 3 மாணவர்கள் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: