காரைக்குறிச்சி அரசு பள்ளியில் ஒன்றிய அளவில் முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா

தா.பழூர், ஜன. 26: காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழாவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்,

ஒன்றிய அளவிலான முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழாவினை முன்னிட்டு,”இது நம்ம ஆட்டம் -2026” விளையாட்டு போட்டிகளை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் (வ.ஊ), ரமேஷ் (கி.ஊ),காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா,தா.பழூர் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

 

Related Stories: