தா.பழூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம்

ஜெயங்கொண்டம், ஜன.26: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,வீரவணக்க நாளை முன்னிட்டு, பெரியார், அண்ணா, மொழிப்போர் தியாகி முன்னாள் எம்எல்ஏ க.சொ.கணேசன் ஆகியோரின் உருவ சிலைகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் தா.பழூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள்,ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கோவி.சீனிவாசன், மாவட்ட அணி நிர்வாகிகள் கார்த்திகைகுமரன், குணசீலன், எழிலரசி அர்ச்சுனன், வாக்குச்சாவடி பொறுப்பாளர் நீல.மகாலிங்கம் மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

 

Related Stories: