குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணி

ஜெயங்கொண்டம், ஜன.26: குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 700 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 77வது குடியரசு தினம் நாளை (ஜன.26) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு சார்பில் கொடியேற்ற நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில், காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைத்தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் எல்லைப் பகுதிகளில் செந்துறை ரவுண்டானா, சிலுப்பனூர், பெரியாத்துக்குறிச்சி, மதனத்தூர், வடவர்தலைப்பு மற்றும் திருமானூரில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: