புவனேஷ்வர்: ஒடிசாவில் உள்ள ரத்னகிரி, உதயகிரி மற்றும் லலித்கிரி ஆகிய 3 புத்த மத தலங்களும் ஒடிசாவின் வைர முக்கோணம் என அழைக்கப்படுகின்றன. புத்த மதத்தை பரப்புவதில் ஒடிசாவின் முக்கிய பங்கை குறிக்கும் வகையில் மடாலயங்கள், ஸ்தூபிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரத்னகிரி, உதயகிரி மற்றும் லலித்கிரி ஆகிய புத்த தலங்கள் யுனெஸ்கோவின் தறகாலிக உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படடு உள்ளன.
