- குடியரசு தினம்
- பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் விளையாட்டு மைதானம்
- இந்தியா
- 77வது குடியரசு தினம்
*மாணவர்கள் நடனமாடி அசத்தல்
பெரம்பலூர் : இந்திய நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இந்திய நாட்டின் 77வது குடியரசு தின விழா 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கும். இதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 77 வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப் பட உள்ளது.
இந்தக் குடியரசு தின விழாவிற்கு, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமை வகித்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஜி.எஸ்.அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோரது முன்னிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவித்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றப் பிறகு, பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலர்களுக்கு, போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக நூற்றுக் கணக்கான பயனாளிகளுக்கு லட்சக் கணக்கான மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விழாவில் நடைபெறவுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன ஒத்திகை பெரம்பலூர் மாவட்டவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
