×

கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியர் பவன்குமார் பேட்டி

கோவை: கோவையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தட்டுப்பாடு குறித்து தகவல் வந்தால் மாவட்ட நிர்வாகம், மாநில அரசுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கும் என கூறினார். சமையல் சிலிண்டர் தொடர்பாக கடந்த சனிக்கிழமையை ஏஜென்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவிக்க ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் வரும்பட்சத்தில், தட்டுப்பாட்டை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் நாடு முழுவதும் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு உடனடி தட்டுப்பாடு ஏதுமில்லை என்று மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகத்தில் வணிக ரீதியான சிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : Goa ,Bhavankumar ,Ruler ,government ,
× RELATED பாமகவின் அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணியே காரணம்: ராமதாஸ்