×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாக்கு மர சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நல்ல நீர்வளம் இருப்பதால் தற்போது பாக்குமர சாகுபடியில் பொட்டியம், மாயம்பாடி, கல்லாநத்தம், எடுத்தவாய்நத்தம், அக்கராயபாளையம். ஊத்தோடைகாடு பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாக்குமர சாகுபடி மலையடிவார பகுதிகளில் நன்றாக விளையும்.

இந்த பாக்கு பயிரில் நாட்டு பாக்கு, கலப்பின பாக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையும் பாக்குகளை கள்ளக்குறிச்சி, தலைவாசல், ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் புரோக்கர்கள் மரங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்வார்கள். அறுவடையின்போது அவர்களுக்கு அதற்குரிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.

பாக்கு மட்டை ரெடிமேடு சாப்பாட்டு தட்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாக்கு சாகுபடியின்போது பாக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக பெரும்பாலும் வாழை மரங்கள் பயிரிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காய்கறி செடிகளும் பயிரிடப்படுகிறது.

இதனால் பாக்கு குலை வரும் வரை ஊடுபயிரில் விவசாயிகள் லாபம் பார்க்கலாம். இதனால் தற்போது கரும்பு, மரவள்ளிக்கு மாற்றாக விவசாயிகள் பாக்குமர சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கச்சிராயபாளையத்தை சேர்ந்த விவசாயி புஷ்பநாதன் கூறுகையில், பாக்கு மரசாகுபடி செய்யும்போது பராமரிப்பு செலவு குறைவாகும்.

அதிகளவில் நீர் தேவையில்லை. பொதுவாக நாட்டு பாக்கு மரத்தை நட்ட 7 ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் சுமார் 1000 மரங்கள் நட்டால் ஒரு மரத்தை ரூ.500க்கு குத்தகைக்கு விட்டாலும் 1000 மரங்களில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ரூ.5லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.

Tags : Baku ,Kallakurichi district ,SINNASELAM ,POTIAM ,MAYAMPADI ,KALLANATHAM ,SARTAWAINATHAM ,AKKARAYAPALAYAM ,Uthodikadu ,
× RELATED பாமகவின் அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணியே காரணம்: ராமதாஸ்