×

கீழ் கோத்தகிரி திமுக மாணவரணி சார்பில் 700 மாணவர்களுக்கு எழுது பொருட்கள்

ஊட்டி : கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக மாணவரணி சார்பில் கோத்தகிரி வட்டாரத்திற்குட்பட்ட 17 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சோலூர்மட்டம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் தினேஷ் தலைமை வகித்து 700 மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட 9 பொருட்கள் அடங்கிய தேர்வுக்கான எழுது பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார்.

கட்டபெட்டு முதல் கரிக்கையூர் வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருள் உபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பல கலந்து கொண்டனர்.

Tags : Kothagiri Dimuka ,Ooty ,Lower Kotagiri Union ,10th grade general election ,Kotagiri ,Solurmatum Government School ,
× RELATED திபெத் எழுச்சி தினத்தையொட்டி ஊட்டியில் அமைதி பேரணி