- தேசிய பெண் குழந்தை தினம்
- தொண்டாமுத்தூர்
- தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- கோயம்புத்தூர்
- நகரம்
- பஞ்சாயத்து
- கமலம் ரவி
- தலைமையாசிரியை
- சாரதா
- நெர்டு
தொண்டாமுத்தூர் : கோவை அருகே தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியை சாரதா வரவேற்றார். இதில், நேர்டு தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் காமராஜ், 200 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், தினகரன் மாத நாட்காட்டி ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், 2026-ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.
விழாவில் தமிழ் இலக்கிய பேரவை தமிழ்ச்செம்மல் கவிஞர் சுப்பு தர்மன், பொருளாளர் தபால் சிவ சண்முகம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி சங்க தலைவர் டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
