பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தர்மபுரி, ஜன. 24: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கவுதம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பளாராக நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான வைகுந்தம் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பனிமலர், வேலு சின்னசாமி, குமரன், கிருஷ்ணன், ரங்கநாதன், சிவா, சக்திவேல், அரசு உயர்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரவி, கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது .

Related Stories: