தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது ஏன்? : பிரதமர் மோடிக்கு சிபிஐ கேள்வி!!

சென்னை : தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, “மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?. மிக்ஜாம் புயல் மற்றும் பெஞ்சல் புயல் பேரிடர் ஏற்படுத்திய சேதாரத்துக்கு நிதி கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காமல் வஞ்சிப்பது ஏன்?. புதிய GST முறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டு இருக்கும் ரூ.20,000 கோடி இழப்பிற்குப் பதில் என்ன?. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தது ஏன்?. அவதூறு பரப்புதல், அதிகார அத்துமீறல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஊக்கப்படுத்துவது ஏன்?” இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: