பொன்னமராவதி, ஜன.23: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நாச்சம்மை தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெள்ளைச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சாந்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆற்றவேண்டி கடமைகள் குறித்தும், பள்ளி மாணவர்கள் வளர்ச்சிக்கும் பள்ளியின் வளர்ச்சியும் செயல்படுவது, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி வழங்கியதற்கும், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையம் அமைத்ததற்கும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதே போல 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத வசதியாக இந்த பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் இயற்றப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிக்ள கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமையாசிரியர் கணேசன் வரவேற்றார். முடிவில் உதவி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

